கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசதிபெற்ற நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் என்னும் பெயர் வரக் காரணமாக இருந்தது இந்த நாகராஜா கோவில் தான் காரணம்.இந்த கோவிலின் கருவறை ஓலை கூறையால் அனது.இங்கு பிரசாதமாக கருமை வண்ண மண்தான் கொடுக்கப்படுகிறது.இந்த கோவில் பற்றிய ஒரு ஆச்சரியமான உண்மை.இந்த நாகராஜா கோவில் சுற்று பகுதியில் பாம்பு கடித்து இதுவரை எவரும் மரணம் அடைந்த தில்லை என்பது ஒரு ஆச்சரியமான உண்மை. ஒவ்வொரு மாதமும் ஞாயிறு தினத்தில் கோவில் வளாகத்தில் உள்ள பல நூறு நாகராஜார் சிலைகளுக்கு பெண்கள் மஞ்சள் பொடியையும் பாலையும் வார்த்து நன்றி காணிக்கையை பெண்கள் பெரும் திரளாக கலந்து கொள்வது வாடிக்கை. இந்நிலையில் பிரசதிபெற்ற நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் ,பாரளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்,மேயர் மகேஷ் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். இந்த விழா 10 நாட்கள் நடக்கிறது.5 ந்தேதி தோராட்டம் நடைபெறும்.
நாகர்கோவில்- நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றம்
