• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சிதம்பரத்தில் ஆர்.எஸ்எஸ், விசிக இடையே மோதல்

Byவிஷா

Apr 6, 2024

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ் மற்றும் விசிகவினரிடையே கடும் மோதல் வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தேசிய வாக்காளர் பேரவை அமைப்பின் சார்பில் வீட்டுக்கு வீடு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பற்றி ஒரு நோட்டீஸ் ஒன்று வழங்கப்பட்டது. இது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் சிதம்பரம் இளமை நாயக்கர் கோயில் தெருவில், அந்த பகுதியில் திமுக கவுன்சிலர் ராஜன் வீட்டில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பற்றி சிந்தித்து வாக்களியுங்கள் என்று கூறினார்கள். இதை அறிந்த வீட்டில் இருந்து வெளியில் வந்த திமுக கவுன்சார் ராஜன் யார் நீங்கள்? எதற்காக இந்த நோட்டீஸ் தருவீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு நாங்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து வந்திருப்பதாக கூற, உங்களுடைய அடையாளத்தின் கார்டு கொடுங்கள் என்று கேட்டதற்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
இதனையடுத்து அந்த நபர் தாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது, பின்பு அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் சிதம்பரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த நிலையில் திமுக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சியினர் சிதம்பரம் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.
அதன் பிறகு ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் ஏற்பட்டது, பின்னர் ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறிவிட்டது. உடனே போலீசார் அனைவரையும் கட்டுப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் சிதம்பரம் காவல் நிலையத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி பெறாமலே நோட்டீஸ் வழங்கியதாக தெரிகிறது, ஆகவே சம்பந்தப்பட்டவர் மீது உரிய விசாரணை நடத்தி கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். காவல் நிலையம் அருகே இரண்டு கூட்டணி கட்சி நிர்வாகிகளும் நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.