மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் இன்று காலை அதிமுக மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், கள ஆய்வுக் கூட்டம், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர்களான அதிமுக கழக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் ஆர். விஸ்வநாதன் மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், பேச வாய்ப்பளிக்க மறுத்ததாக கழக நிர்வாகிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட, இரு பிரிவினர்களாக கழக நிர்வாகிகள் பிரிந்து கைகலப்பில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர்களின் அறிவுறுத்தலுக்குப் பிறகு, கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.