இயேசு கிறிஸ்துவின் பிறப்பை எடுத்த கூறும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள புனித பாத்திமா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தத்ரூபமாக மாட்டு தொழுவம் அமைக்கப்பட்ட குழந்தை இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பை வலியுறுத்தும் விதமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் நான்காவது வீதி பகுதியில் உள்ள புனித பாத்திமா பேராலயத்தில் இயேசு கிறிஸ்து அவதரித்த மாட்டுத் தொழுவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து பேசிய பேராலயத்தின் பங்கு தந்தை ஜெயசீலன், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் வழக்கமாகவே கோவையின் பெரிய தேவாலயங்களில் ஒன்றான பாத்திமா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா மிகச் சிறப்பாக நடைபெறும் எனவும் 4000க்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் நிலையில் இந்த ஆண்டும் திருப்பலி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை எடுத்து கூறும் விதத்தில் மாட்டுத் தொழுவம் அமைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.