அட்சய லக்ன பத்ததி கோவை மையம் சார்பாக சுயம்வர கலாபார்வதி யாகம் மற்றும் இலவச ஜோதிட ஆலோசணை வழங்கும் மாபெரும் ஜோதிட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
லக்னத்தை, வயதிற்கு ஏற்ப வரிசைப்படுத்தி பலன்களை துல்லியமாக கணிக்கும் முறை அட்சய லக்ன பத்ததி எனும் (ஏ.எல்.பி.) முறை இந்நிலையில் அட்சய லக்ன பத்ததி கோவை மையம் சார்பாக மாபெரும் ஜோதிட திருவிழா கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டப அரங்கில் நடைபெற்றது.இதில் சுயம்வர கலாபார்வதி யாகம்,மற்றும் இலவச ஜோதிட ஆலோசணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தின் தந்தை பொதுவுடைமை மூர்த்தி தலைமை தாங்கினார்.
ஏ.எல்.பி.சோதிடர் சிம்மம் ரங்கநாதன் முன்னிலை வகித்தார்.கவுரவ விருந்தினர்களாக கந்தசாமி அன் கோ ஜெயகுமார்,வெங்கடேஷ்வரா ஸ்டீல்ஸ் விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி குறித்து ஏ.எல்.பி. ஜோதிட தந்தை பொதுவுடைமை மூர்த்தி கூறுகையில்..,
அனைத்து மக்களின் தேவைகள் நிறைவேற ஒரு கூட்டு பிரார்த்தனையாக இந்த யாகம் நடைபெறுவதாகவும்,தொடர்ந்து மூன்றாவது முறையாக நடைபெறும் இதில் இலவசமாக ஜோதிட ஆலோசணைகளையும் வழங்குவதாக தெரிவித்தார்.நிகழ்ச்சியில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்,,திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.