தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். தாளாளர் சுதாகர் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் குணசீலராஜ் வரவேற்புரை நிகழ்த்தி விருந்தினர்களை கௌரவித்தார். புலனாய்வுத் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற செல்வராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கிறிஸ்மஸ் செய்தி வழங்கினார். பள்ளி மாணவர்கள் கிறிஸ்மஸ் பாடல்களை பாடினர். மாணவர்களின் கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கிறிஸ்து பிறந்த முன்னனை காட்சியினை தத்ரூபமாக மாணவர்கள் நடித்து காண்பித்தனர். ஒவ்வொரு வகுப்பிலும் பல்வேறு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கிறிஸ்மஸ் புத்தாடைகள் வழங்கப்பட்டது. பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் மதிய விருந்தும், கிறிஸ்மஸ் கேக்குகளும் கொடுக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியை சாரா ஞானபாய் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.