• Thu. Jul 17th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு..,

BySeenu

Jun 21, 2025

கோவை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் எழும்பி பிரகாசி மிஷினரி பேராய எனும் கிறிஸ்துவ அமைப்பின் நிறுவன தலைவர் பேராயர் ஜெயசிங் உள்ளிட்ட மத போதகர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகளின் கீழ் 8 லட்சத்திற்கும் அதிகமான மத போதகர்கள் சமயப் பணி ஆற்றி வருவதாகவும்,சிறுபான்மை மக்களின் காவலர்கள் என கூறிக்கொள்ளும் திமுக கடந்த தேர்தல் அறிக்கையில் மத போதகர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தனர்.

ஆனால் நான்கு ஆண்டுகள் ஆகியும் அதனை நிறைவேற்றவில்லை எனவும் விரைவில் முதல்வரை சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்க இருப்பதாகவும்,தேர்தல் நெருங்கும் வேளையில் கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பாக வலியுறுத்த இருப்பதாக தெரிவித்தனர்.

இப்போது அமைக்கப்பட்டுள்ள உபதேசியர் பணி யாளர் நலவாரியம் என்பது கிறிஸ்தவர்களாகிய எங்களை பிற்படுத்தப்பட்ட – பட்டியலில் சேர்த்து அதை துவக்கி உள்ளனர். இதுகு றித்து முதல்வரிடம் அமைக்கப்பட்ட வாரியத்தால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. போதகர் நலவா ரியம் வேண்டும் எனகடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டது.

தமிழக கிறிஸ்தவர்க ளின் முன்னேற்றத்துக்காக, எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம் அனைத்தும் ஒன்று சேர்த்து, 8 லட்சத்து 25 ஆயிரம் ஊழியர்களும்,
போதகர்களும் தமிழகத்தில் உள்ளனர் என்பதை 2026ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னிறுத்துவோம். குறைந்தது 65 லட்சம் வாக்காளர்கள் கிறிஸ்தவர்களில் உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் திமுக, போதகர் நல வாரியம் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. அதை நம்பி நாங்கள் ஓட்டளித்தோம்.

யார் எங்களது கோரிக்கைகளை ஏற்று தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு, எழுத்து மூலமாக எந்த கட்சி முன் வருகிறதோ அவர்களுக்கு ஆதரவு தர இருக்கிறோம்.
போதகர்கள் நல வாரியத்தை முன்னெடுத்து நிற் பவர்களை ஆதரிக்க 65 லட்சம் கிறிஸ்தவர்கள் கண் விழித்தார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது எழும்பி பிரகாசி மிஷனரி பேராயத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேராயர் டேனியல் சக்ரவர்த்தி, பேராயர் தீனதயாளன், கோவை மாவட்ட பேராயர் ஜெப ராஜன்,ஆயர்கள் கார்த்திக்,சுரேஷ் மோசஸ், மற்றும் பேராயத்தின் பொறுப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.