உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். கிருஸ்த்துவர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றானது கல்லறை திருவிழா உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உள்ள அனைத்து கிருஸ்தவ ஆலய கல்லறைகளில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் இறந்து போன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு கல்லறை தோட்டங்களில் மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.

இதனையொட்டி காரைக்கால், கோட்டுச்சேரி, நெடுங்காடு மற்றும் திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறைகளை கிறிஸ்தவர்கள் சுத்தம் செய்து வண்ண பூக்களை கொண்டு கல்லறையை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். காரைக்கால் கல்லறைத் தோட்டத்தில் பங்கு தந்தை பால்ராஜ் குமார், இணை பங்கு தந்தை சாமிநாதன் செல்வம் ஆகியோர் அனைத்து ஆன்மாக்களின் இளைப்பாறுதலுக்காக புனித நீரால் மந்திரித்து, சிறப்பு திருப்பலி நடத்தினர்.

இதுபோல தலத்தெரு கல்லறை தோட்டத்தில் கோட்டுச்சேரி பங்குத்தந்தைஅனைத்து ஆன்மாக்களின் இளைப்பாறுதலுக்காக புனித நீரால் மந்திரித்தார். அதனைத் தொடர்ந்து தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)