• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வடிவேலுவுக்கு கோரியோகிராபி! – 1 கோடி வாங்கிய நடிகர்!

தமிழ் சினிமாவில், நகைச்சுவை நடிகர் வரிசையில் இன்றளவும் முதல் இடம் பிடித்தவர், வடிவேலு தான்.
அரசியல், விளையாட்டு, சினிமா என அனைத்திலும் வடிவேலு காமெடிகள் தான் மீம்ஸ்களாக வருகிறது. தற்போது வடிவேலு நடிப்பதற்கான தடை காலம் நீங்கி நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க சுராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பியபோது வடிவேலுக்கு ஓமைக்ரான் தொற்று உறுதியாக இருந்தது. தற்போது அதிலிருந்து வடிவேலு மீண்டு வந்துள்ளார். ஆரம்பத்தில் தான் நடித்த படங்களில் சில பாடல்களை வடிவேலு பாடியுள்ளார். அதில் எட்டணா இருந்தா எட்டுரு என் பாட்டைக் கேட்கும், வாடி பொட்ட புள்ள வெளியே போன்ற பல பாடல்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது நாய் சேகர் படத்தில் வடிவேலு ஒரு பாடல் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு நடன புயல் பிரபுதேவா கோரியோகிராபி செய்துள்ளார். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் பிரபுதேவா ஒரு கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.

பிரபுதேவாவின் காதலன் படத்தில் ஊர்வசி ஊர்வசி, பேட்ட ராப் பாடல்களில் வடிவேலு பிரபுதேவாவுடன் இணைந்து நடனமாடியுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வடிவேலு, பிரபுதேவா காம்போவை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.