• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

கரூர் வாராஹி அம்மனுக்கு சித்திரை பஞ்சமி திதி

ByAnandakumar

Apr 17, 2025

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராஹி அம்மனுக்கு சித்திரை மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பஞ்சமி திதியை முன்னிட்டு, பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மினி பேருந்து நிலையம் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு சித்திரை மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சுவாமிக்கு இன்று எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்டு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார். தொடர்ந்து, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் மினி பேருந்து நிலையம் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராஹி அம்மனுக்கு நடைபெற்ற சித்திரை மாத பஞ்சமி திதி அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.