திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.. பள்ளி தாளாளர் அருட் தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருட்தந்தை ரூபன் முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி அருட்தந்தை பிரிட்டோ அனைவரையும் வரவேற்றார்.

ஆஸ்திரேலியா எம். எஸ். சி. சபை மிஷன் இயக்குனர் அருட் தந்தை ரோஜர், இந்திய எம்எஸ்சி சபை மிஷன் இயக்குனர் அருட்தந்தை ஆரோக்கியசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இதில் ஆஸ்திரேலியா எம் எஸ் சி சபை மிஷன் இயக்குனர் அருட் தந்தை ரோஜர் பேசியதாவது: இப்பகுதியிலேயே சிறந்து விளங்கும் பள்ளியாக செவாலியர் அகாடமி பள்ளி விளங்குகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அறிவு உள்ளவர்களாகவும், அனைத்து திறன்களும் உடையவர்களாகவும் விளங்குகின்றனர்.
எம் எஸ் சி சபையின் மூலம் நல்ல உதவிகளை இந்த பள்ளி அதிக அளவு பெற்றுள்ளது. குழந்தைகள் அனைத்து திறமைகளும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள், என்றார். இதில் இந்திய எம்எஸ்சி சபை மிஷன் இயக்குனர் ஆரோக்கியசாமி பேசியதாவது: உழைப்புதான் ஒருவரை முன்னேற்றும். குழந்தைகள் தின விழாவில் நாம் சபதம் ஏற்க வேண்டும். படிப்பு என்ற உழைப்பு மேலும் உங்களை உயர்வடையச் செய்யும்.

உங்களுக்கு அனைத்து திறமைகளும் உள்ளன. ஆனால் உழைப்பை மறக்கக்கூடாது. ஒரு நாள் உழைப்பு மறந்தாலும் நம்மை பின்னுக்கு தள்ளிவிடும். இதை உணர்ந்து அனைவரும் உழைக்க வேண்டும். குழந்தைகளாக இருக்கும்போது உழைக்கும் பழக்கம் இருந்தால் உயர்வுக்கு பஞ்சம் இருக்காது.
உங்கள் அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்,
என்றார். துணை முதல்வர் ஞானசீலா நன்றி கூறினார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.







; ?>)
; ?>)
; ?>)
