• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

ByN.Ravi

Feb 23, 2024

மதுரை அருகே, சோழவந்தான் பேரூராட்சியில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ். கே ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் பொறுப்பு செல்வகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தில், குழந்தை திருமண தடுப்பு, பாலியல் ரீதியான துன்புறுத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சனைகள், பள்ளி இடைநிற்றல், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் நிலைகள், பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் , வளரினம் பருவத்தில் குழந்தைகள் இடையே ஏற்படும் மாற்றங்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் பயிற்சிகள், குழந்தைகளுக்கான கட்டணம் இல்லா தொலைபேசி எண் சைல்ட் எண்1098.14417.181 குறித்தும் கூட்டத்தில் எடுத்து
ரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சமூக பணியாளர் அருண்குமார், சோழவந்தான் காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் முத்தையா, பேரூராட்சி அலுவலக இளநிலை உதவியாளர்கள்கல்யாண சுந்தரம், கண்ணம்மா, துப்புரவு ஆய்வாளர் சூர்யகுமார் மற்றும் பணியாளர்கள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தன பாக்கியம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் பாண்டியம்மாள் செல்வி சமூக நலத்துறை மாவட்ட பாலின நிபுணர் சங்கர் மகளிர் சுய உதவி குழு தலைவி நாகஜோதி மற்றும் உறுப்பினர்கள் மலர்விழி, நதியா மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அமெரிக்கன் கல்லூரி முதுகலை சமூகப்பணி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.