
மதுரை கார் லாரி மோதி தீ விபத்து ஏழு பேர் காயம் அடைந்தனர். மதுரை
மாவட்டம், மேலூர் அருகே வலைச்சேரிபட்டி நான்கு வழிச்சாலையில், சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினர் மதுரை வந்துவிட்டு,
பின் மீண்டும் சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, வலைச்சேரிபட்டி நான்கு வழிச்சாலையில் முன்னே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி திடீரென திரும்பியதால், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது. இதனைக் கண்ட, அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அதற்குள் கார் திடீரென தீ பற்றி எரிய துவங்கியது. தீ மளமளவென பிடித்து எரிந்ததால் உடனடியாக கொட்டாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் தண்ணீர் பிய்ச்சி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காரில் வந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் சிறுசிறு காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்து குறித்து, கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
