

ஹெலிகாப்டர் விபத்தில் உ..பி.முதல்வர் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டரில் பறவை மோதியதால் அவசரஅவசரமாக தரையிறக்கப்பட்டது.வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக நேற்று யோகி ஆதித்யநாத் வாரணாசி வந்திருந்தார்.
இந்த நிலையில் வாரணாசியிலிருந்து லக்னோ செல்வதற்காக புறப்பட்ட போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரின் மீது பறவை ஒன்று மோதியது . இதனால் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரஅவசர மாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் உ.பியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.