• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம், நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது

ByKalamegam Viswanathan

Dec 30, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் கடந்த 10 தினங்களாக ஒவ்வொரு பகுதி வாரியாக மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்நிலையில் 40, 41,42, பகுதியில் உள்ள வார்டுகளுக்கான மக்களை தேடி முதல்வர் திட்ட சிறப்பு முகாம் PACR நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த முகாமினை நகர மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக நகராட்சித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என 10 அரசு துறை சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

பல அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தாலும் மகளிர் உரிமை தொகை விடுபட்டிருந்த மற்றும் நிராகரிக்கப்பட்ட பெண்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தனர். இந்த முகாமில் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.