• Wed. May 1st, 2024

மாணவர்கள் மின்னணு சாதனங்களின் உபயோகங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்… முன்னாள் தலைமை செயலர் இறையன்பு IAS..,

ByKalamegam Viswanathan

Dec 18, 2023

மாணவர்கள் மின்னணு சாதனங்களின் உபயோகங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். செல்போன் போன்றவற்றில் பல மணி நேரம் முடங்கி இருப்பதால் நமக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. மன அழுத்தம் ஏற்படுகிறது ஆகையால் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். திட்டமிடங்கள் முறைப்படுத்துங்கள் செயல் படுத்துங்கள் —முன்னாள் தலைமை செயலர் இறையன்பு IAS.

மதுரை தனியார் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி காலங்கள் என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்திய முன்னாள் தலைமைச் செயலர்,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெருங்குடி தனியார் கல்லூரியில் கல்லூரி காலங்கள் என்ற தலைப்பில் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ் கலந்து கொண்டார். கல்லூரி தாளாளர் நாகரத்தினம் நிர்வாக குழு உறுப்பினர் ஜெகதீசன் வரவேற்புரை கூறினார். ராஜேந்திரன் கார்த்திகேயன் மற்றும் கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் தலைமைச் செயலர் இறை அன்பு ஐ.ஏ.எஸ்,கூறுகையில், மாணவர்கள் தங்களுக்கான முயற்சிகளை தாங்களே அமைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத பகட்டுத்தனம் மற்றும் ஆடம்பரம் ஆகியவை உங்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தாது. கடினமாக உழையுங்கள், பிறரை அரவணைத்துச் செல்லுங்கள்.

கல்லூரி என்பது உங்களுக்கு ஒரு வழிகாட்டுதல் இடம் இங்கு நீங்கள் தேவையை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பயணம் செய்யுங்கள். செல்போன் மற்றும் மடிக்கணினி போன்றவை உங்களுடைய முயற்சிகளை முடக்கும் .

ஒரு மணி நேரம் உட்கார்ந்தால் பத்து நிமிடம் நடக்க வேண்டும். இது உடற்கூரில் உள்ள இயல்பாடு. ஆனால் செல்போனை வைத்துக் கொண்டு பல மணி நேரங்கள் நாம் இருப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. திட்டமிடுங்கள் திட்டத்தை செயல்படுத்துங்கள் செயல்படுத்தியவற்றை நடைமுறைப்படுத்துங்கள். வெற்றி உங்களுக்காக அமையும் என முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு மாணவரிடம் கூறினார். மாணவரிடம் கலந்து விடா நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *