

நாகப்பட்டினத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின், தம்பிதுரை பூங்காவில் இருந்து எஸ்பி அலுவலகம் வரை நடந்தபடி பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கைக்குலுக்கி உற்சாகமடைந்தனர்.

நாகை மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைத்தந்துள்ள தமிழக முதல்வரை நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக மாவட்ட செயலாளர் கெளதமன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் மேளதாளம் முழங்க உற்சாகமாக வரவேற்றனர்.நாகை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய தமிழக முதல்வர் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க நாகை தம்பிதுரை பூங்காவில் இருந்து நடந்தபடி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள்களை சந்தித்தபடி (ROAD show) நடந்து சென்றார். ஸ்டாலினுக்கு இருபுறங்களிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டவருடன் கைகுலுக்கி மகிழ்ந்தார். சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த தொமுச நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நாகை அவுரி திடலில் 105 புதிய பேருந்து சேவையை முதலமைச்சர் தொடங்கி இருக்கிறார். பின்னர் நாகை அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் 38,956 பயனாளிகளுக்கு 200 கோடியே 27 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், கட்டி முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து நாகை – நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட தளபதி அறிவாலயத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வர் மாலை 4 மணிக்கு தளபதி அறிவாலயத்தில் 37 திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். முதல்வர் வருகை யொட்டி சுமார் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

