• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முதல்வர் கும்பகர்ணன் போல் தூங்குகிறார்- அண்ணாமலை சர்ச்சை பேச்சு…

Byகாயத்ரி

Sep 27, 2022

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை செய்து சிலரை கைது செய்துள்ளது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து முதல்வர் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்றும் கும்பகர்ணன் போல் அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்றும் அவரை எழுப்புவது எங்கள் பணி என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் அரசு தனது கடமையை சரியாக செய்கிறதா என ஆளுநர் கண்காணித்து வருகிறார் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.