• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் – பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்…

ByKalamegam Viswanathan

Jan 1, 2024

காரியாபட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அனைத்து துறைகள் வாரியாக பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெற்று அவற்றை காலதாமதமின்றி நிறைவேற்றி கொடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். அதன்படி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் செந்தில் முகாமினை .தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். முகாமில் துணை ஆட்சியர் சுகுமாறன், தாசில்தார் சுப்பிரமணியன், மண்டல துணை தாசில்தார் நலிந்தோர், திட்ட தனி வட்டாட்சியர் அய்யாவு குட்டி, வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி, மின்சார வாரிய செயற் பொறியாளர் கண்ணன், உதவி செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியம், சப். இன்ஸ்பெக்டர் அசோக் குமார், கவுன்சிலர்கள் முகமது முஸ்தபா , தீபா சங்கரேஸ்வரன் , முத்துக்குமார், நாகசெல்வி வருவாய் ஆய்வாளர்கள் ஜோதி, புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முகாமில் வருவாய்துறை, மருத்துவ துறை, மிகவும் பிற்பட்டோர் நலத்துறை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்.டு துறை சிறுபான்மையினர் நலத்துறை தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு துறை, மாவட்ட தொழில் மையம், மின்சார துறை காவல் துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், புதிய மின்இணைப்பு மின் இணைப்பு பெயர் மாற்றம் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்டம், முதியோர், பென்ஷன், விதவைகள் மறுவாழ்வு, உதவிகள் சொத்துவரி, வீட்டு வரி பெயர் மாற்றம், பல்வேறு துறை சார்ந்த மனுக்கள் கொடுத்தனர். இதில் பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு தகுதியான பைர்களுக்கு பட்டா, மாறுதல் உத்தரவு, மின்இணைப்பு பெயர் மாற்றம், புதிய மின்இணைப்பு உத்தரவுகளை பயனாளிகளுக்கு உடனே வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை பேரூராட்சி தலைவர் செந்தில், செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்.