• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி..!

Byவிஷா

Nov 15, 2023

கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா இன்று காலை காலமானார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
சுதந்திரப் போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 13-; தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சங்கரய்யா இன்று காலை 9.30 மணியளவில் காலமானார். சங்கரய்யாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. சங்கரய்யாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சங்கரய்யாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.