• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ரஜினிகாந்தை நேரில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…

Byமதி

Oct 31, 2021

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்திடம் நேரில் சென்று உடல் நலம் விசாரித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், “ரஜினி சிறு தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்த் உடல்நலம் தேறி வருகிறார். சிகிச்சைக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார்” என தெரிவிக்கப்பட்டது.

இதை மேலும் உறுதிசெய்யும் வகையில், ரஜினிகாந்த் ஆரோக்கியமான உடல்நலத்துடன் உள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன்னும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று மருத்துவமனையில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.