• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் ஒப்புதல்

சென்னையைச் சேர்ந்த சேகர் ராம் என்பவர் தன்னை பத்திரிகையாளர் எனகூறிக்கொண்டு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக பணியாற்றிய பொன்.மாணிக்கவேல் தவறான அறிக்கையை தாக்கல் செய்ததாகத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மதம் 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையில், சேகர் ராம் போலி பத்திரிகையாளர் எனத் தெரியவந்தது. அதையடுத்து, அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, `ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில், மூத்த பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கியதமிழ்நாடு பிரஸ் கவுன்சில்’-ஐ 3 மாதங்களில் அமைக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், “இத்தகைய பிரஸ் கவுன்சில் மட்டுமே பிரஸ் கிளப் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களை அங்கீகரிக்க வேண்டும். சாதி, மத மற்றும் மொழி அடிப்படையில் இயங்கும் பத்திரிகையாளர் சங்கங்களை அங்கீகரிக்கக் கூடாது” என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், இது தொடர்பான அறிக்கை ஒன்றைதமிழக அரசுசென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன் தாக்கல் செய்த அந்த அறிக்கையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்ததும் தமிழக பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்" என கூறப்பட்டுள்ளது. மேலும்,அங்கீகார அட்டை பெறுவதற்கான 2021-ம் ஆண்டு திருத்தப்பட்ட விதிகள் வெளியிடப்படும்” என்றும் தமிழக அரசு கூறியுள்ளது