பொதுவாக சினிமாவில் பணியாற்றுபவர்களுக்கு சென்னையில் வாடகைக்கு வீடு தர மாட்டார்கள், பெண் கொடுக்க தயங்குவார்கள் இதற்கு காரணம் சினிமா தொழிலில் இருப்பவர்களை பற்றிய தவறான கண்ணோட்டம், குடியும் கூத்துமாக இருப்பார்கள் என்பது பொதுப்புத்தியில் அழுத்தமாக பதிவாகியுள்ளதுதான் இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் குடிபோதையில் நடிகை அல்லது நடிகர்கள் கார் ஓட்டியதால் கார் விபத்தில் சிக்கியது என்கிற செய்திகள் அவ்வப்போது வெளிவருவது வாடிக்கையாகிப்போனது போதைப்பொருட்களுக்கு விளம்பர மாடலாக இந்தியாவில் முதல்முறையாக இருந்தவர் இந்தி நடிகர் சத்ருஹன் சின்கா தமிழகத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பீர் விளம்பரத்திற்கு மாடலாக இருந்துள்ளார்
இது போன்ற விளம்பரங்களை வெளியிடக் கூடாது என மத்திய அரசு தடை விதித்தபின் புகையிலை, மதுபானங்களுக்கு செய்திதாள், தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளிவருவதில்லை இந்த நிலையில் மது விளம்பரத்தில் நடிகைகள் நடிப்பது தவறில்லை என திருவாய்மலர்ந்திருக்கிறார் நடிகை பாயல் ராஜ்புட்தமிழில் கோல்மால், இருவர் உள்ளம் படங்களில் நடித்தவர் பாயல் ராஜ்புட். தெலுங்கில் ஆர்எக்ஸ் படத்தில் அறிமுகமாகி அங்கு ஏராளமான படங்களில நடித்தார். சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் பாயல் ராஜ்புட் நடிகைகள் மது விளம்பரத்தில் நடிப்பது தவறில்லை என்றும், பெண்கள் பொழுதுபோக்கிற்காக குடிக்கிறார்கள் என்றும் கூறி இருக்கிறார். இது வைரலாகி இருக்கிறது.இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிகைகள் மதுபான பிராண்டின் போஸ்டர் அல்லது விளம்பரத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும்போது பழமைவாதிகள் அவர்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதே காரியத்தை ஒரு நடிகர் செய்தால் யாரும் விமர்சிப்பது இல்லை. இதில் ஏன் ஆண் – பெண் வேறுபாடு பார்க்க வேண்டும். பெண்கள் பொழுதுபோக்கிற்காக மது அருந்துகிறார்கள். அதனால் பெண்கள் அதனை விளம்பரப்படுத்துவதில் தவறில்லை. என்று கூறியிருக்கிறார். கேஜிஎஃப் இயக்குநர் நீல் நான் குடித்துவிட்டுத்தான் கதை எழுதுவேன் என சில தினங்களுக்கு முன்கூறியிருந்தது சர்ச்சைக்குள்ளானது இருந்தபோதும் திரை துறையினர் இது போன்று அவ்வப்போது பேசி சினிமா கலைஞர்கள் மீது இருக்கும் நல் அபிப்பிராயங்களை சீர்குலைக்கும் போக்கு தொடர்கதையாக இருந்து வருகிறது