• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

கலைகட்டபோகும் சென்னை மெட்ரோ ரயில் நிலையம்..!

Byகாயத்ரி

Aug 11, 2022

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என மெட்ரோ ரயில் நிலையம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காவடி ஆட்டம், மயிலாட்டம், காளையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் நையாண்டி மேளம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் என்றும் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை சென்னை அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.