• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்னை இலக்கியத் திருவிழா:
முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை இலக்கிய திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை இலக்கிய திருவிழா இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம், கல்லூரி மாணவர்களுக்கான பயிலும் அரங்கம் மற்றும் சிறுவர்களுக்கான இலக்கிய அரங்கம் என 4 அரங்கங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருவிழா பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடவுள்ளனர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. இந்த இலக்கியத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் மாநாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.