• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சென்னை பூரண சுவிசேஷ கிறிஸ்தவ சபையில்.., குருத்தோலை ஞாயிறு பவனி..!

Byஜெ.துரை

Apr 3, 2023

சென்னை வடபழனி பஜனை கோவில் அருகே அமைந்துள்ள பூரண சுவிசேஷ கிறிஸ்தவ சபையில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, குருத்தோலை பவனி சிறப்பாக நடைபெற்றது.
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர்.

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். ஜெருசேலம் நகரில் கோவேறு கழுதையில் பவனியாக வந்த இயேசு கிறிஸ்துவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று முழங்கியதை நினைவுகூறும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு சென்னை வடபழனியில் அமைந்துள்ள பூரண சுவிசேஷ கிறிஸ்தவ சபையின் போதகர் ஜாய் சாமுவேல் தலைமையில் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி 1-வது அவன்யு, 2-வது அவன்யு, சுப்ராயன் நகர், ஒட்டக பாளையம், வடபழனி சைதாபேட்டை ரோடு வழியாக ஓசன்னா கீதங்களை பாடியபடி இச்சபையின் மக்கள் பவனியாக வந்தனர். பின்னர் திருச்சபைக்கு வந்து சிறப்பு ஆராதனையும் நடை பெற்றது.