நடந்து முடிந்த முதல் கூட்டத்தொடரிலேயே சிங்கார சென்னை 2.0 திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக தற்போது 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழமையான கட்டடங்கள், நகர்புற நில மேம்பாடு, உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மருத்துவ உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளன.

பசுமை சென்னை, தூய்மை சென்னை, நீர்மிகு சென்னை, எழில்மிகு சென்னை, நலம் மிகு சென்னை, கல்விமிகு சென்னை என பல்வேறு பிரிவுகளில் சென்னையைப் பிரித்து மேம்படுத்தப்பட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.