• Mon. Dec 9th, 2024

”ஏமாற்றப்பட்ட ‘பிக்பாஸ்’ ஜூலி… காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்

Byமதி

Dec 4, 2021

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொது அதிகமாக பாராட்டப்பட்டவரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகமாக பேசப்பட்டவருமான ஜூலி தன்னை ஒருவர் காதலிப்பதாகக் கூறி சுமார் ரூ.2.30 லட்சம் மோசடி செய்திருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகாரில், மனிஷ் என்பவர் தன்னை காதலிப்பதாகக் கூறி தன்னிடமிருந்து இருசக்கர வாகனம், நகை, பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலிக்கும், மனிஷ் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களாக காதல் இருந்ததாகவும், மனிஷ் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும்; திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னிடமிருந்து அவர் பணம் பெற்று அதன்மூலம் பல்சர் இருசக்கர வாகனம், பிரிட்ஜ் மற்றும் இரண்டு சவரன் செயின் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டதாகவும், தற்போது அனைத்தையும் பெற்றுக்கொண்ட பின்னர் மனிஷ் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் அமைந்தகரை காவல் நிலையத்தில் ஜூலி புகார் அளித்துள்ளார். போலீசார் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.