காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் ஆறுமுகம் திருநள்ளாற்றில் பிரபாகரன் ஏற்பாட்டில் JCM மக்கள் மன்றங்களை சமூக சேவகர் சார்லஸ் மார்டின் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு சேலை, அரிசி, சர்க்கரை, பிளாஸ்டிக் பக்கெட் உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னதாக புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்ற சமூக சேவகர் சார்லஸ் மார்டினுக்கு காரைக்கால் மாவட்ட எல்லையில் JCM மக்கள் மன்றத்தினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து காரைக்கால் மாவட்ட எல்லையில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து சமூக சேவகர் சார்லஸ் மார்டின் மரக்கன்றை நட்டார். பின்னர் கோட்டுச்சேரி பகுதியில் உள்ள ஸ்ரீ கூத்தாடும் விநாயகர் கோவில் மற்றும் உலக புகழ்பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில்
சாமி தரிசனம் செய்த அவர், கோட்டுச்சேரி பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.











; ?>)
; ?>)
; ?>)