கிழக்கு தாம்பரத்தில் ஆதி மூலம் நீலாவதி அம்மாள் அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் புத்தாடைகள், ஊக்கத்தொகை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

சமூக சேவையின் அடையாளமாக அமைந்த இந்த நிகழ்ச்சியில், தினந்தோறும் நகரின் தூய்மையை பாதுகாக்கும் தூய்மை பணியாளர்களின் உழைப்பை மதித்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு மகிழ்விக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட துணை செயலாளர் அர்ச்சுணன் பேசுகையில், “62-ஆவது வட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ஆதிமூலம் நீலாவதி அம்மாள் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் மூன்று கல்லூரிகளை தேர்வு செய்து முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளுடன் 25 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். மேலும் ஆதரவற்றோர் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பள்ளி, கல்லூரி கல்விக்கான நிதி உதவியும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி தலைவர் ஜெய்சங்கர், குமார், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மாவட்ட கழகப் பேச்சாளர் கோ. சி. வாசன் நிர்வாகிகள் அசுமதிராஜா, மூர்த்தி, கணேசன் மேஸ்திரி, டிரைவர் சந்தானம், செந்தில்நாதன், முருகன், மாரிமுத்து, மனோகரன், சந்தர்பால், ராஜா, ஆறுமுகம், கொயில்துரை, சண்முகம் மேஸ்திரி, சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அதேபோல் கழக மகளிரணி மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்களும் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு உதவிகளை வழங்கினர்.

மொத்தத்தில், இந்த நிகழ்ச்சி தூய்மை பணியாளர்களின் உழைப்பை மதித்து பாராட்டும் சமூக பொறுப்புணர்வின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.





