• Fri. Mar 29th, 2024

தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு செங்கோட்டை புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில் (வ.எண்.06663) மற்றும் செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு மதுரை புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில் (வ.எண்.06664) ஆகியன வருகிற 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16868) வருகிற 5-ந் தேதி முதல் வருகிற 10-ந் தேதி வரையும், வருகிற 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையிலும் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். ராமேசுவரம் – மதுரை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில் (வ.எண்.06654) இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேசுவரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படும். அதேபோல, மதுரை-கச்சக்குடா (செகந்திராபாத்) வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 7-ந் தேதி மதுரையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு பதிலாக அதிகாலை 6.30 மணிக்கு புறப்படும் என்று மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *