• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சந்திராயன்3 நிலவில் தரையிறங்குவது.., நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பேட்டி…

ByKalamegam Viswanathan

Aug 23, 2023

மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது அவர் கூறுகையில்,

சந்திராயன் விக்ரம் நிலவில் தரையிறங்குவது குறித்த கேள்விக்கு,

தங்கத்தால் பொறிக்கப்பட வேண்டிய நாள். இந்தியாவின் விஞ்ஞானிகளுக்கு மற்றும் இஸ்ரோவுக்கு கிடைக்க கூடிய வெற்றி. இந்தியா எப்படி மிகப்பெரிய ஆவலோடு எதிர்பார்க்கிறதோ, அதேபோல் தான் நானும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நம்முடைய விஞ்ஞானிகளின் சிந்தனை,செயல்பாடு, உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. இந்தியாவே அவர்கள் பின்னால் நின்று வாழ்த்துகிறது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித்தமிழர் என்று பட்டம் கொடுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு,

அவருடைய கட்சித் தலைவருக்கு அவர்கள் என்ன பட்டம் வேண்டும் என்றாலும் கொடுக்கலாம் .இது ஒன்றும் வியப்பளிக்கவில்லை. ஒரு படம் நடிக்கும் நடிகருக்கு பட்டம் கொடுக்கப்படுகிறது. ஒரு பெரிய கட்சித் தலைவருக்கு பட்டம் கொடுப்பது ஒன்றும் தப்பு கிடையாது.

இந்த பட்டம் நடிகர் சத்யராஜுக்கு முன்னர் கொடுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு,

அந்த படத்தை நான் பார்க்கவில்லை, இப்போ வரும் நடிகருக்கே பட்டம் கொடுக்கிறார்கள். பெரிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு அவருடைய தொண்டர்களை பட்டம் கொடுத்தால் அது அவர்களுடைய விருப்பம் அதில் விமர்சனம் செய்வதற்கு ஒன்றும் கிடையாது.

நீட் தேர்வு காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்த போது தான் கொண்டு வந்தது குறித்த கேள்விக்கு,

இது தவறு, 2010 மன்மோகன்சிங் ஆட்சியிலே மாநிலங்கள் விரும்பினால் நீட்டில் சேர்ந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் அவர்களே தேர்வு நடத்தலாம் என்பதுதான் கிளாஸ், அந்த கிளாசில் கட்டாய நீட்டை காங்கிரஸ் கட்சி கொண்டு வரவே கிடையாது. இரண்டாவது இப்போது நம் மாற்ற வேண்டும் என்று விரும்பினால் தமிழக முதல்வர்,மாநில முதல்வரும் ஒன்று சேர்ந்து மீட்டிங்கைப் போட்டு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை திருப்பி, திருப்பி சொல்லாதீர்கள், காங்கிரஸ் கட்சி நீட்டை கொண்டு வரவில்லை, மாநிலங்கள் விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என்று சரத்தை அதில் இருந்தது. சரத்தை மாற்றியது பாஜக அரசாங்கம்.

காவேரி விவகாரத்தில் மேகதாது அணை குறித்த கேள்விக்கு,

பேச்சுவார்த்தை மூலமாக,காவிரி ஆணையத்தின் மூலமாக, நீதிமன்றத்தின் மூலமாகத்தான் தீர்வு காண முடியும். அண்ணன் தம்பிகளுக்கு இடையே வரப்பு மூலமாக பிரச்சனை இருக்கிறது. ரெண்டு மாநிலக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது நமக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரு பரஸ்பரத்தின் மூலமாக ஒரு ஆணையத்தின் மூலமாக கண்டிப்பாக நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக கூட்டணி தான் குறை சொல்கிறார்கள் குறித்த கேள்விக்கு.

பிஞ்சு போய் கதை ரொம்ப ஆயிப்போச்சு, எதிர்காலத்தில் நடக்கப் போவதை பார்ப்போம். அதிமுக மாநாட்டில் இபிஎஸ் கச்சத்தீவு குறித்து தான் தேசிய உள்ளார் குறித்த கேள்விக்கு.

அதை மீட்பதற்காக அதிமுக முயற்சி எடுக்கும். அவர்களுக்கு நெருங்கியவர்கள் தான் மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள். அதனால் ஒரு பிரகணம் செய்து அதை மீண்டும் நாம் எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்று சொல்லாவிட்டால் 56 இன்ச் இருக்கும் மார்பவர்களை படை படையை அனுப்பச் சொல்லுங்கள்.

அதிமுக மாநாடு தேர்தலை குறிவைத்து மாநாடு வைத்துள்ளார்கள் குறித்த கேள்விக்கு

அதிமுக வலிமையான அரசியல் கட்சி என்பதை நான் இன்று ஏற்றுக்கொள்கிறேன் கிராமங்களில் வேறொன்று அரசியல் கட்சி அதை அவர்கள் மீண்டும் அறிவித்திருக்கிறார்கள் ஆனால் அவர்கள் பாஜாகோட இருக்கும் வரை தமிழ்நாடு மக்களுக்கு அவர்களை நிராகரித்துக் கொண்டே தான் இருப்பார்கள் பாஜகவுடன் இந்துத்துவ அரசியல் தமிழ்நாடு மக்கள் என்றும் வைத்துக்கொள்ள மாட்டார்கள் அதிமுக என்னதான் செய்தாலும் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் மக்களை சனித்தார்கள் என்றால் என்றுமே அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள்.

அண்ணாமலை பாதயாத்திரை தாக்கம் குறித்த கேள்விக்கு

அண்ணாமலை பாதயாத்திரை எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, பத்திரிகையாளர்கள் அவருக்கு பூதக்கண்ணாடியும்,மெகா போனும் கொடுத்து அதை ஊதி பெருசாக்கிறிர்களே தவிர மக்கள் மத்தியில் எந்த பிரதிபலிப்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார்.