• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சந்தன மாரியம்மன் ஆடி உற்சவ திருவிழா

ByN.Ravi

Aug 3, 2024

சோழவந்தான் சந்தன மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். மதுரை மாவட்டம், சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூக்குழி மந்தை திடலில் அமைந்துள்ள அருள்மிகு சந்தன மாரியம்மன்
ஆடி உற்சவ திருவிழா பக்தர்களின் காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. கடைசி வெள்ளி அன்று பால்குடம் அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளதால், அதற்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி கோவிலில் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, சந்தன மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து பக்தர்கள் பெண்கள் பொதுமக்கள் என, ஏராளமானோர் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து, ஆடி வெள்ளியான நேற்று கூழ் காய்ச்சி பொதுமக்களுக்கு
வழங்கினார்கள். அர்ச்சகர் மருதுபாண்டி ஏற்பாடுகளை, செய்திருந்தார்.