• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

Byகாயத்ரி

Aug 16, 2022

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலமும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி தமிழகத்தில் நீலகிரி , கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். ஆகஸ்ட் 17ஆம் தேதி நாளை நீலகிரி, கோவை , ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.