• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இன்று 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

Byவிஷா

Jan 19, 2024

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் கனமழை பெய்தது. பிறகு அப்டியே படிபடியாக சில மாவட்டங்களில் கனமழை குறைந்தது. இந்த நிலையில், இன்று தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி,நெல்லை, ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.