• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

Byவிஷா

Oct 12, 2022

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருக்கிறது. மேலும், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, திருப்பத்தூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.