சென்னையை அடுத்த பெருங்குடி ரயில் நிலையத்தில் கடற்கரை செல்லும் ரயிலுக்காக சுமார் 30 வயது பெண் பயணம் செய்ய நடைபாதையில் உள்ள இருக்கையில் காத்திருந்தார். அப்போது சுற்றி கொண்டு இருந்த நபர் ஒருவர் திடீரென அமர்ந்து இருந்த பெண் அருகே உட்கார்ந்தார்.

சிறிது நேரத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென பெண்ணின் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.
அவர் சத்தம் போட்டதும் அங்கிருந்து சென்று விட்டார். மாலை நேரத்தில் ரயில் நிலையத்தில் பெண்ணின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயினை இளைஞர் பறித்துக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








