திண்டுக்கல் மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு முகாம் சான்றிதழ்களை வழங்கப்பட்டது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பா.உஷாமற்றும் மாநில நாட்டு நலப்பணி தொடர்பு அலுவலர் செளந்தரராஜன் மற்றும் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் முதன்மை கல்வி அலுவலர் உஷா பேசியதாவது: மாநில நாட்டு நலப்பணி தொடர்பு அலுவலர் சௌந்தர்ராஜன் தலைமையிலான குழுவினர் மிகச் சிறப்பாக செயல்படுகின்றனர்.
அனைத்து பள்ளிகளிலும் நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் மாணவர்கள் தாங்கள் விழிப்புணர்வு அடைவது மட்டுமல்லாமல், மக்களும் பல பிரச்சினைகளில் விழிப்புணர்வு அடைய செய்கின்றனர். இதனால் திட்ட முகாம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுடைய ஈடுபாடுகள் நமது மாவட்டத்தை சிறப்படையச் செய்துள்ளது. பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணியை திட்ட அலுவலர் ஆசிரியர் செல்வராஜ் உட்பட பல ஆசிரியர்கள் நல்ல வழிகாட்டியாக உள்ளனர். இதனால் சிறந்த இலக்கை நாம் அடைவோம்,என்றார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செந்தில்குமார், சேதுராமன்,கார்த்திக் உட்பட பல பங்கேற்றனர்.











; ?>)
; ?>)
; ?>)