• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி..,

ByM.I.MOHAMMED FAROOK

May 2, 2026

காரைக்காலில் உள்ள டாக்டர் எய்ம்ஸ் அகாடமி சார்பில் 2026 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு சோதனை முறையில் ஐந்து மாணவர்களுக்கு மட்டும் நீர் பயிற்சி அழிக்கப்பட்ட நிலையில் தற்போது அதனை விரிவு படுத்தி இந்த ஆண்டு 48 மாணவர்களுக்கு டாக்டர் எய்ம்ஸ் அகாடமி சார்பில் 40 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களை சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா வழங்கி மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் பிஎஸ்ஆர் கோல்ட் ஹவுஸ் இயக்குனர் பிரேம் ஆனந்த், ஹவுஸ் ஆப் நிலா சி.யு.ஓ வெண்ணிலா ராமச்சந்திரன் ஆகியோர் மாணவர்களை ஊக்குவித்து பேசினார். எய்ம்ஸ் அகாடமி இயக்குனர் புவனேஸ்வரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார். முன்னதாக தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியினை ஆசிரியர் விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நீட் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.