• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் கராத்தே பயிற்சி தேர்வு மாணவர்களுக்கு சான்றிதழ்

ByN.Ravi

May 19, 2024

மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி மீனாட்சி நகரில் ஸ்ரீ கணேசா கராத் தே புடோகான் பயிற்சி பள்ளி சார்பாக 26- வது ஆண்டு கராத்தே கருப்புபட்டை மற்றும் வண்ண நிற பேல்ட்கள் தேர்வும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு, கவியரசு கண்ண தாசன் இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் பொன். பனகல் பொன்னையா தலைமை தாங்கி, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். வர்த்தக சங்க செயலாளர் மனோராஜா, இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி பள்ளி நிர்வாகி சென்சாய் கணேசன் வரவேற்றார். இதில், கராத்தே, கருப்புபட்டை மற்றும் வண்ண நிற பட்டைகள் தேர்வும் நடந்தது.
இந்த போட்டியின் நடுவர்களாக பயிற்சியாளர்கள் செல்வகணேஷ், சந்துரு, ஷாலினி, தன்யா, டானியல் ராஜ், மேரனிஷ், சந்தோசினி ஸ்ரீ இருந்தனர்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசும் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்ட னர்.
முடிவில், பயிற்சியாளர் சென்சாய் செல்வகணேஷ் நன்றி கூறினார்.