• Thu. Sep 28th, 2023

கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு – எம்.பி விஜய்வசந்த்

     காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில்  மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மற்றும் குழந்தைகளுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று மார்த்தாண்டம் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குமரி மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் ஷாஜன் தலைமையில் நடைபெற்றது. 
    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கினார். மாவட்ட அளவில் கலை இலக்கிய போட்டிகளில் அதிக மதிப்பெண் பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடித்த கல்லூரி மற்றும் பள்ளிக்கு கோப்பை பரிசு வழங்கினார்.

   நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ரத்தினகுமார், ஆரோக்கியராஜன், ரமேஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ்,  மீனவர் அணி மாநில தலைவர் ஜார்ஜ் ராபின்சன், குழித்துறை நகர தலைவர் அருள்ராஜ், மாவட்ட கவுன்சிலர் ஷர்மிளா ஏஞ்சல்,மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திவாகர், வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் நிர்வாகிகளும், பேற்றோர்களும் கலந்து கொண்டனர்.                                                     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *