• Sun. Oct 6th, 2024

வேளாங்கண்ணி மாதா கோவிலில் பெயிண்டிங் வேலை செய்து வந்த மதுரையை சேர்ந்த இலங்கை தமிழர் விபத்தில் பலி

ByKalamegam Viswanathan

Jul 29, 2023

மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி ஈழத்தமிழர் முகாமில் வசித்து வருபவர் சத்யராஜ் இவருக்கு வயது 34. இவர் பெயிண்டராக கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுகன்யா (30) என்ற மனைவியும், மதுமிதா (12) மற்றும் ஓவியா(8) என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த சில நாட்களாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோயிலில் பெயிண்ட் அடிக்கும் பணி செய்துவந்தார். இதனை அடுத்து நேற்று இரவு 1 மணியளவில் 30 அடி உயரத்தில் கம்பி சாரத்தின் மேல் நின்று பெயிண்டிங் வேலை பார்த்து வந்தபோது திடீரென கம்பி சாரம் முறிந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கீழே விழுந்து அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலை 4:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். உடல் கூராய்வு பிரேத பரிசோதனை கூடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நல்லடக்கம் செய்வதற்காக இவரது உடலை மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா உச்சப்பட்டி ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டுவர தகுந்த உதவி செய்ய வேண்டுமென அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.

மேலும் சத்யராஜு -வை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் மகள்கள் இருவருக்கும் எதிர்கால வாழ்வாதாரத்திற்காக நிவாரண உதவி அளிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *