புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 2 ஆயிரத்து 605 மாணவ மாணவிகளுக்கு பள்ளி திறந்த தினமான இன்று யூனிபார்ம் காலணிகள் 5 வண்ண பென்சில் உள்ளிட்ட குறிப்பேடு வழங்கப்பட்டது. புதுக்கோட்டையில் நடந்த விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் காலணிகள் வண்ண பென்சில் அட்லஸ் வரைபடம் பாட குறிப்புகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி வருகிறது.
கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
பள்ளி திறக்கும் திறமான இன்று மாணவ மாணவிகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா பொருட்கள் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரிட்டு இருந்தபடி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள படிக்கும் இரண்டு லட்சத்து 2 ஆயிரத்து605 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பொருட்கள் இன்று வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் ஆட்சியர் அருணா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கினர்.