• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் விழா..,

ByKalamegam Viswanathan

Jul 30, 2025

மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நிறுவனர் விழா நடைபெற்றது

தலைவர் மற்றும் தாளாலர் திரு.ஹரி தியாகராஜன் அவர்கள் தமது உரையில் ஆடை தயாரிப்பின் வரலாறை விரிவாக எடுத்துரைத்தார். மேலும் தனது உரையில் தொழில் முனைவோர்க்கான உத்திகளை தனது அனுபவத்தின் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைத்து மாணவர்களை ஊக்குவித்தார்

கௌரவ விருந்தினர் J.V. அஜய் குமார் ,துணைத்தலைவர் -நோக்கம் விருத்தி,ஹேலோஜன் ,மிடில் ஈஸ்ட் ,ஆசியா பசிபிக். தமது உரையில் இக்கல்லூரியின் தொழில் முனைவோர்க்கான இடத்தில் இருந்து தன் பயணத்தை ஆரம்பித்து,பின்னர் பெங்களூரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி மிகவும் வெற்றியாளராக வலம் வருவதாகவும்.அதுபோல் மற்ற மாணவர்களும் இக்கல்லூரியின் தொழில் முனைவேர்க்கான வாய்ப்புகளை பயன்படுத்தி சிறந்த தொழில் முனைவோர் ஆக வேண்டும் என தனது தொழில் பயணத்தை பகிர்ந்தார்.

விழாவில் முன்னால் இஸ்ரோ விஞ்ஞானி திரு. நம்பி நாராயணன் தமது உரையில் செயற்கை கோள் மற்றும் அதனை சார்ந்த தொழில் நுட்பங்கள் மேம்பாடு அடைய வேண்டும் என்றும் ,மாணவர்கள் தமது புதுமையான கண்டுபிடிப்புக்கான சிந்தனையை இஸ்ரோ என்றும் ஊக்குவிக்கும் எனவும் ,இஸ்ரோ அதனை ஒரு கலாச்சாரமாக வைத்து கொண்டுள்ளது எனவும் கூறினார்.மாணவர்கள் அவர்களது புதுபுது சிந்தனைகளை இஸ்ரோ விடம் பகிர்ந்து மாணவர்கள் தங்கள் வாய்ப்புகளை பெற்று கொள்ளலாம் என கூறினார்.

இவ்விழாவில் தற்போது கல்லூரியில் படிக்கும் 241 எளிய மாணவர்களின் கல்விக்காக முன்னாள் மாணவர்களின் அறக்கட்டளையின் நிதியில் இருந்து ரூபாய் 96,61,118 [தொண்ணூற்று ஆறு லட்சத்து அறுபத்து ஒன்று ஆயிரத்து நூற்றுப்பதினெட்டு ரூபாய்] வழங்கப்பட்டது.

2000ம் ஆண்டில் இக்கல்லூரியில் பயின்ற பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்கள் ருபாய் 50,02,000 காசோலையை அறக்கட்டளைக்கு வழங்கினார்கள்.