• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

துபாயிலிருந்து மதுரை வந்த பயணிக்கு மயக்கம் ஏற்பட்டதில் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பிய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்…

ByKalamegam Viswanathan

Sep 10, 2023

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் கோவிந்தராஜன் வயது 45 இவ்வாறு துபாயில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தவர் மதுரை விமான நிலையத்தில் மயக்கம் ஏற்பட்டு வியர்த்து கொட்டியது. இதனை அடுத்து பயணிகள் கூறியதின் பேரில் விமான நிலையத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் மத்திய தொழிற்படை வீரர்கள் அவருக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் மூலம் மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துபாயில் இருந்து மதுரை வந்த பயணி மயக்கம் ஏற்பட்டு தவித்த நிலையில் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் மத்திய தொழிற்சாலை வீரர்கள் முதலுதவி செய்தது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.