• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை ஒதுக்கிய மத்திய அரசு

ByA.Tamilselvan

Nov 25, 2022

இந்திய அளவில் தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்துக்கு ரூ.17000 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்துக்கு ரூ.1188 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்திற்கு அதிகபட்சமாக 2081 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு ரூ.1915 கோடி, தலைநகர் டெல்லிக்கு ரூ.1200 கோடி, உத்தர பிரதேசத்திற்கு ரூ.1202 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது.’2022-2023ம் நிதியாண்டில் இதுவரை 115662 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக இந்த ஆண்டு மார்ச் இறுதி வரை வசூலிக்கப்படும் மொத்த செஸ் தொகையையும் முன்கூட்டியே விடுவித்துள்ளது.