தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்று முதல் தொடங்கி தொடர்ந்து 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் சுய கணக்கெடுப்பில் தவறாமல் பங்கு கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆண்டாள் தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் முக்கிய வீதியில் வழியாக நடைபெற்றது. ஊர்வலத்தில் துணை வட்டாட்சியர்கள் ,வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், திரளானோர் கலந்து கொண்டனர்.




