• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

மறுமலர்ச்சி தி மு க தொடங்கப்பட்டதின் 30-வது ஆண்டு விழா கொண்டாட்டம்

சுசீந்திரம் புகழ்பெற்ற தாணுமாலைய சாமி கோயில் அருகில்.மறுமலர்ச்சி தி மு க தொடங்கப்பட்டதின்.30_வது ஆண்டு விழா.அகஸ்தீஸ்வரம் ஒன்றிய மறுமலர்ச்சி திமுகவின் சார்பில் கொண்டாடப்பட்டது.


முதல் நிகழ்வாக கூடியிருந்த கட்சியினர் மட்டும் அல்லாது தாணு மாலைய சாமியை தரிசிக்க வந்த வெளியூர்,வெளி மாநில சுற்றுலாப் பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நலிந்த நிலையில் உள்ள பெண்களுக்கு சேலைகளை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றி வேல் வழங்கினார்.ஆண்களுக்க வேஷ்டி,துண்டை அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் ந. பாலசுப்பிரமணியன் வழங்கினார். இந்த நிகழ்வில் சுசீந்திரம் பேரூர் கழக செயலாளர் நிஷா நடராஜன், மகளிரணி நிர்வாகிகள், ஒன்றிய பொருளாளர் இராஜனந்த் மற்றும் மறுமலர்ச்சி தி மு கழகத்தின் பல்வேறு பொருப்பாளர்களும் பங்கேற்றனர் நிகழ்ச்சியின் நிறைவில் சுசீந்திரம் பேரூர் செயலாளர் வே.செல்வகுமார் நன்றி தெரிவித்தார்.