

மகாகவி பாரதியாரின் 102 வது நினைவு நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
மறைந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் 102 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் அவர் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவருடைய சிலைக்கு தனது மகள் மருமகன் மற்றும் தாயாருடன் இணைந்து மகாகவி பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார். மதுரை பாரதி யுகேந்திரா நிறுவன தலைவர் நெல்லை பாலு அவர்கள் ஒருங்கிணைப்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களின் ஏற்பாட்டில், பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
