சாத்தூரில் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் சாத்தூர் முக்குராந்தல் பகுதிக்கு வந்தடைந்தது.

கடந்த ஐந்தாம் தேதி கன்னியாகுமரி பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பிரச்சார இருசக்கர வாகனம் கோவை மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட 3 பகுதிகளில் இருந்து தொடங்கியதாகவும் மே 16 இல் சட்டமன்றத்தை சென்றடைந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாகவும் இந்த இருசக்கர வாகன பிரச்சார இயக்கத்தினர் தெரிவித்தனர்.
2003 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசியல் பணிபுரியும் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் பணிக்கொடை குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை நிறுத்திய சி பி எஸ் எனப்படும் ஓய்வூதியத் திட்டத்தை ஒழிக்க வலியுறுத்தியும், ராஜஸ்தான் ஜார்க்கண்ட் சத்தீஸ்கர் இமாச்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்தியுள்ளதை தெரியப்படுத்தவும் திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் திமுக வாக்குறுதியை நினைவுபடுத்தவும் இந்தப் இருசக்கர வாகனப்பிரச்சார இயக்கம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் முக்கூராந்தல் பகுதியில் இருசக்கர வாகன பிரச்சார இயக்கத்தினர் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன் தங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர். அதனைத் தொடர்ந்து தங்களது பிரச்சார இயக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)